அதிர்ச்சியில் பகுதி நேர ஆசிரியர்கள் – மே மாதம் ஊதியம் கிடையாது!
தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 11 மாத ஊதியம் மட்டுமே வழங்கப்படும் என அறிவிப்பு.
தமிழகத்தில் உள்ள 12,000 பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் கிடையாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மே மாதம் ஊதியம் கிடையாது என்ற ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பால் பகுதிநேர ஆச்சிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருக்கு மாநில திட்ட இயக்குநர் அனுப்பிய கடிதத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அண்மையில் 12 மாதங்கள் ஊதியம் வழங்க கேட்டு டிபிஐ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜூன் மாதம் அறிவிப்பு வரும் என அமைச்சர்கள் உறுதி அளித்த நிலையில், போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், மே மாதம் ஊதியம் வழங்கப்படமாட்டாது என்ற அறிவிப்பால் பகுதிநேர ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே, பகுதிநேர ஆசிரியர்களுக்கு 11 மாத ஊதியம் மட்டுமே தரப்படும், மே மாதம் ஊதியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.