#BREAKING:வேதா இல்லத்தின் ஒரு பகுதியை நினைவில்லமாக மாற்றலாம் உயர்நீதிமன்றம்.!
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவில்லமாக மாற்றலாம் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜெயலலிதாவிற்கு ரூ.9.13 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களைமுறையாக நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி அதிமுக உறுப்பினர்கள் புகழேந்தி, ஜானகிராமன் இருவரும் வழக்கு தொடர்ந்தனர்.
வாதங்கள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவில்லமாக மாற்றலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வேதா நிலையம் இல்லத்தை முதல்வரின் அலுவலகமாக மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. ஜெயலலிதா அவர்களின் வேதா இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.