தமிழகத்திற்கு நிதி தர முடியாது! மத்திய அமைச்சர் திட்டவட்டம் !
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இதற்க்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அக்டோபர் 31க்குள் பதில் அளித்துவிடுவதாக தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாவிட்டால் உள்ளாட்சிக்கு நிதிகளை ஒதுக்க முடியாது என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தல் நடத்ததால் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் ஊழல் அதிகரித்துள்ளதாக, உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக எம்பி ஆ.ராசா கேள்வி கேள்வி எழுப்பியதற்கு இந்த பதிலை மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
தமிழக அரசு சார்பில், ‘ நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதால் தேர்தலை நடத்த முடியவில்லை.’ என பதில் அளிக்கப்பட்டது.