நாடாளுமன்ற தேர்தல் – 38 குழுக்களை அமைத்தது தமிழ்நாடு பாஜக!
நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழ்நாட்டில் 38 குழுக்களை அமைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக அறிவிப்பு இம்மாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின் மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
இந்த சூழலில் தேர்தலுக்கான பணியில் தலைமை தேர்தல் மற்றும் மாநில தேர்தல் ஆணையங்கள் ஒருபக்கம் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் உள்ளிட்ட அனைத்து மாநில கட்சிகளும் தேர்தலுக்கு ஆயுதமாகி வருகின்றனர். அதன்படி, கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் பணி அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் பிரதான கட்சிகள் செயல்பட்டு வருகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. 90 சதவீத பணிகள் நிறைவு.! – அமைச்சர் சேகர்பாபு தகவல்.!
இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் 38 குழுக்களை அமைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அதன்படி, தேர்தல் நிர்வாகம், தேர்தல் அலுவலகம், கால் சென்டர், புரோட்டா கால், அலுவலக நிர்வாகம், மகளிர் பிரச்சாரக்குழு, இளைஞர் பிரச்சார குழு, பட்டியல் இனத்தை சேர்ந்த பிரச்சார குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று, பாஜக தேர்தல் பிரச்சார உரை தயாரிக்க தனி குழுவும், உரையை அச்சிட தனிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் அறிக்கை தயாரிக்க எச்.ராஜா, கேபி ராமலிங்கம், கார்வேந்தன், ராம சீனிவாசன் ஆகியோர் கொண்ட குழுவும், குற்றப்பத்திரிகை தயாரிப்பதற்காக பாஜக மாநில செயலாளர்கள் எஸ்ஜி சூர்யா, அஸ்வத்தாமன் ஆகியோர் கொண்ட தனி தேர்தல் குழுவும் அமைத்து அண்ணாமலை அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் – 2024 க்கான மாநில தேர்தல் மேலாண்மை குழு விவரங்கள் குறித்து மாநில தலைவர் திரு. @annamalai_k அவர்கள் வெளியிட்ட அறிக்கை 1/2 pic.twitter.com/JOnCp5qzzQ
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) February 5, 2024