நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கு இன்று ஒரு நாள் பயற்சி!

tamilnadu election commission

அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது இந்திய தேர்தல் ஆணையம்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி 2வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. இதையடுத்து மத்தியில் ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.

பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர். இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த சமயத்தில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, அதற்கான பணிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் இருப்பு எண்ணிக்கை மற்றும் வாக்கு இயந்திர உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்ய மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இதே போல வாக்காளர் பட்டியலை தயார் படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்று தேர்தலை முன்னிட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது இந்திய தேர்தல் ஆணையம்.

அதன்படி, தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயற்சி இன்று தொடங்கப்படுகிறது. வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் ஆகியவற்றை சரிபார்ப்பதற்கான பணி இன்று தொடங்குகிறது. காலை 11 மணிக்கு தொடங்கும் பயிற்சியில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மிக விரைவில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகள் நடைபெற உள்ளது எனவும் கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்