2024 நாடளுமன்ற தேர்தல் : தமிழக அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை.!

அடுத்த வருடம் ஏப்ரல் , மே மாதங்களில் நாடு முழுக்க மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளில் பிரதான அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளது போல, இந்திய தேர்தல் ஆணையமும் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யாபிரபா சாஹூ தலைமையில் , தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
வரும் நவம்பர் 27ஆம் தேதி வாக்காளர் வரைவு அறிக்கை வெளியாக உள்ளது. நவம்பர் 4,5 மற்றும் 18,19 ஆகிய தேதிகளில் வாக்காளர் அட்டையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025