நாடாளுமன்ற தேர்தல்- அதிமுகவில் இன்று விருப்ப மனு விநியோகம்..!
மக்களவைத் தேர்தல் தேதி சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் மும்பரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தேர்தல் அறிக்கை தயார் செய்யும் குழு மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தும் குழு என தனி தனியாக அனைத்து கட்சிகளும் குழுக்களை அறிவித்து உள்ளனர்.
திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கிடையில் அதிமுக மற்றும் பாஜக தற்போது வரை கூட்டணி குறித்து இந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவரிடமிருந்து விருப்பம் பெற திமுக மற்றும் அதிமுக ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் முதல் திமுக தரப்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை விநியோகம் செய்து வருகிறது.
இன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்..!
இந்நிலையில், இன்று முதல் அதிமுக தரப்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புகின்றவர்களுக்கான விருப்ப மனுக்களை விநியோகம் செய்ய உள்ளனர். இதுகுறித்து அதிமுக தரப்பில்கூறுகையில் ” நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் அதிமுக தலைமைஅலுவலகத்தில் இன்று முதல் விருப்பமனு பெற்று கொள்ளலாம்.
பொதுத்தொகுதிக்கு வேட்பாளர் கட்டணமாக ரூ 20 ஆயிரமும், தனித்தொகுதிக்கு வேட்பாளர் கட்டணமாக ரூ 15 ஆயிரமும் செலுத்தவேண்டும். உரிய கட்டணங்களை செலுத்தி அதிமுகவினர் விருப்ப மனுக்களை பெறலாம். இன்று முதல் மார்ச் 1 ஆம் தேதி வரை விருப்பமனுக்கள் விநியோகம் செய்யப்படும்” என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.