ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதி, மார்ச் 24 முதல் மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாகச் செயல்படாது.
அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள 4 சக்கர வாகன நிறுத்தும் பகுதியில், மேம்பாடு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், மார்ச் 24ம் தேதி முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு மூடப்படுவதாகச் சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் உள்ள நான்கு சக்கர வாகன நிறுத்தும் பகுதி, பயணிகளின் வசதி மற்றும் பார்க்கிங் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்படவுள்ளது.
இதற்கு மாற்றாக பயணிகள் தங்களது நான்கு சக்கர வாகனங்களை பரங்கிமலை மெட்ரோ நிலைய வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்த தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் மெட்ரோ பயணிகள் வழக்கம்போல் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் நான்கு சக்கர வாகன பயன்பாட்டாளர்கள் தற்காலிகமாக வாகன நிறுத்த இயலாததற்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறது எனவும் குறிப்பிட்டுள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…