பட்ஜெட்டில் மிகப்பெரிய உணவு பதப்படுத்தும் பூங்கா திண்டிவனம் அருகே பெலாக்குப்பத்தில் 450 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என்றும், 10 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த உணவு பதப்படுத்தும் பூங்காக்கள் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
வேளாண் பொருட்களின் மதிப்பைக் கூட்டி, சேதங்களைக் குறைக்க வலுவான – திறன் மிக்க உணவு பதப்படுத்தும் தொழில் மையங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக நிதியமைச்சர் தெரிவித்தார். திண்டிவனத்தை அடுத்த பெலாக்குப்பத்தில் 450 ஏக்கரில் மிகப்பெரிய உணவு பதப்படுத்தும் பூங்கா ஏற்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து தேனி, விருதுநகர், தூத்துக்குடி, ஈரோடு, கடலூர், சேலம், திண்டுக்கல், திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒருங்கிணைந்த உணவு பதப்படுத்தும் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். இவற்றில் பழங்கள், காய்கறிகள், மீன்கள், பால் பொருட்கள், கோழி மற்றும் இறைச்சி பதப்படுத்தும் தனியார் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்மூலம் கிராமப்புறங்களில் கணிசமான வேலை வாய்ப்புகள் உருவாக வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்தார். சிறப்பு உணவு பதப்படுத்தும் கொள்கை வெளியிடப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…