2018 தமிழக பட்ஜெட்:450 ஏக்கரில் திண்டிவனம் அருகே மிகப்பெரிய உணவு பதப்படுத்தும் பூங்கா!

Default Image

பட்ஜெட்டில்  மிகப்பெரிய உணவு பதப்படுத்தும் பூங்கா திண்டிவனம் அருகே பெலாக்குப்பத்தில் 450 ஏக்கர் பரப்பளவில்  அமைக்கப்படும் என்றும், 10 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த உணவு பதப்படுத்தும் பூங்காக்கள் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

வேளாண் பொருட்களின் மதிப்பைக் கூட்டி, சேதங்களைக் குறைக்க வலுவான – திறன் மிக்க உணவு பதப்படுத்தும் தொழில் மையங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக நிதியமைச்சர் தெரிவித்தார். திண்டிவனத்தை அடுத்த பெலாக்குப்பத்தில் 450 ஏக்கரில் மிகப்பெரிய உணவு பதப்படுத்தும் பூங்கா ஏற்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து தேனி, விருதுநகர், தூத்துக்குடி, ஈரோடு, கடலூர், சேலம், திண்டுக்கல், திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒருங்கிணைந்த உணவு பதப்படுத்தும் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். இவற்றில் பழங்கள், காய்கறிகள், மீன்கள், பால் பொருட்கள், கோழி மற்றும் இறைச்சி பதப்படுத்தும் தனியார் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் கிராமப்புறங்களில் கணிசமான வேலை வாய்ப்புகள் உருவாக வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்தார். சிறப்பு உணவு பதப்படுத்தும் கொள்கை வெளியிடப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்