பரிதி இளம்வழுதி எனது உயிர் நண்பர் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஈரோடு இடைதேர்தலில் பணியாற்றும் நிர்வாகிகள் ஒருநாள் விடுமுறை பெற்று திருமண விழாவுக்கு வந்துள்ளனர் என திருமணவிழாவில் முதல்வர் பேச்சு.
முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகனின் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தலைமையேற்று நடத்தி வருகிறார்.
இந்த நிகழ்வில் வாழ்த்துரை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈரோடு இடைதேர்தலில் பணியாற்றும் நிர்வாகிகள் ஒருநாள் விடுமுறை பெற்று திருமண விழாவுக்கு வந்துள்ளனர். இவர்கள் திருமண விழா முடிந்து தேர்தல் பணிக்கு செல்கிறார்களா என கண்காணிப்பேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், மணமகன் பரிதி இளம்சுருதியின் உடலில் ஓடுவது கருப்பு, சிவப்பு ரத்தம். பரிதி இளம்சுருதியின் தந்தை எனது உயிர்நண்பர். என்மீது அதிகம் பாசம் கொண்டவர். 1980-ஆம் ஆண்டு பரிதி இளம்வழுதியை முதன்முதலில் சிறையில் தான் சந்தித்தேன் என தெரிவித்துள்ளார்.