கருணைக்கொலை செய்யக்கோரி மனு அளித்த பெற்றோர்.!

Default Image

திருப்பூர் ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த 85 வயதுடைய சென்னியப்பன் மற்றும் 65 வயதுடைய இவரது மனைவி கருணையம்மாள், இவர்களுக்கு பழனிச்சாமி என்ற மகனும், கண்ணம்மாள் என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகின்றன. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதியர் மனு அளித்தனர். அதில், எனது மகன் பழனிச்சாமி, எங்களது சொத்துக்களை ஏமாற்றி, பிடுங்கிக் கொண்டு கடந்த10 ஆண்டுகால எங்கள் இருவரையும் கொடுமைப்படுத்திவருகிறான்.

இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் ஆனாலும் நடவடிக்கை எடுக்க வில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்தும் எங்களுக்கு விடிவு கிடைக்கவில்லை.எங்கள் வீட்டில் மின்சாரத்தை துண்டித்து வைத்துள்ளார், குடிநீர் பிடிக்க விடுவதில்லை, நாங்கள் வாழவே வழி இல்லாமல் தத்தளித்து வருகிறோம் எனவே எங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். இல்லையென்றால் கருணைக் கொலை செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்