தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது. இதனால், பல தனியார் பள்ளிமற்றும் கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழக மகிளா காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சுதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், மாணவர்களுக்கு சத்துணவு மற்றும் முட்டை வழங்க வலியுறுத்தி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்க்கு நேற்று விசாரணைக்கு வரும்போது, ஆஜரான அரசு வழக்கறிஞர், தனிமனித இடைவெளியை மாணவர்கள் பின்பற்றுவதில் பிரச்சினை ஏற்படும் என்பதால் முட்டை வழங்க முடியாது என தெரிவித்தார்.
இதனை கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சமூக இடைவெளியை பின்பற்றப்படாத மதுக்கடைகளை மூட அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என கேள்வி எழுப்பினர். மேலும், வாரத்தில் இருமுறை முட்டை வழங்க வேண்டும் அதனை எப்படி வழங்குவது என்பது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என வழக்கு விசாரணையை இன்று ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இன்று உயர்நீதிமன்றம் பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சத்துணவு முட்டையை பெற்றோர்களை வரவழைத்து வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…