17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாக்கிய இளைஞர்!கூறிய பதிலை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்!

- 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இளைஞர்.குழந்தையை பேற்றெடுத்த சிறுமி.
- இளைஞர் கூறிய பதிலை கேட்டு செய்வதறியாது திகைத்த பெற்றோர்.கைது செய்த காவல்துறையினர்.
நாமக்கல் மாவத்தில் உள்ள கொல்லிமலை பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி ஆவார்.இவர் ஆரியூர் நாடு குழிவளவு பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த ஒருவருடமாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நந்தகுமார் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி தனது ஆசைக்கு இனங்க சிறுமியிடம் உல்லாசம் அனுபவித்துள்ளார்.இந்நிலையில் சிறுமி கர்ப்பமாகி சில நாட்களுக்கு முன்பு குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இதன் அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இதன் காரணமாக சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.பின்னர் நந்தகுமார் திருமணம் செய்து கொள்வதாக கூறிய தகவல் தெரியவர நந்தகுமாரிடம் பேச சென்றுள்ளனர்.
ஆனால் நந்தகுமார் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார்.இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற சிறுமியின் பெற்றோர் வாழவந்தி நாடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ பிரிவின் கீழ் நந்தகுமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!
April 19, 2025