புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பெரியகல்லுவயலைச் சேர்ந்த காடப்பன் செல்வி தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நான்காவதாக பிறந்த 9 மாத ஆண் குழந்தையை பிறந்த நான்கு நாட்களிலேயே 5 லட்ச ரூபாய்க்கு பெற்றோர் விற்பனை செய்ததாக, அங்குள்ள ஒருவர் குழந்தைகள் நல அலுவலருக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பான புகாரை அடுத்து சைல்டு லைன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் விசாரணை நடத்த சம்பவ இடத்திற்கு சென்றபோது, காலப்பனும் அவரது மனைவி செல்வியும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.
இந்நிலையில், குழந்தை மற்றும் பெற்றோரை ஒப்படைப்பதாக ஊர் மக்கள் தகவல் தெரிவித்ததால் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். பிறகு சில மணி நேரத்திலேயே வீட்டிற்கு வந்த பெற்றோர் மற்றும் குழந்தையை ஊர்மக்கள் சுற்றி வளைத்த பிடித்து அவர்களை குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் அங்கு குழந்தையின் பெற்றோரிடம் குழந்தைகள் நல தலைவர் ஸ்டெல்லா புஷ்பராணி தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் இளையராஜா ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் குழந்தையின் பெற்றோர்கள் முரண்பாடான பதில்கள் கூறியதால், சந்தோகமடைந்த சைல்டு லைன் அமைப்பினர், காவல் துறையினரிடம் அவர்களை ஒப்படைத்து விசாரணை மேற்கொள்ள அனுப்பி வைத்தனர்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…