சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சார்ந்தவர் கோபால் இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி சுமித்ரா.இவர்களுக்கு அபிமன்யு என்ற ஒரு மகன் உள்ளார்.நேற்று கோபால் தனது மகன் மற்றும் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் கொருக்குப் பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பி வந்தனர்.
கொருக்குப் பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்த போது காற்றில் இருந்து பறந்து வந்த மாஞ்சா நூல் இருசக்கர வாகனத்தில் முன் உட்காந்து இருந்த அபிமன்யு கழுத்தில் வெட்டியது.
உடனே அபிமன்யுவை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அபிமன்யுவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.இது குறித்து ஆர்.கே நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மாஞ்சா நூலால் ஏற்பட்ட உயிர் இழப்புகளை தொடர்ந்து மாஞ்சா நூல் மற்றும் காத்தாடிக்கு அரசு தடை விதித்து உள்ளது.ஆனாலும் மாஞ்சா நூலால் குழந்தை அபிமன்யு இறந்தது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…