பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் ஆலோசனை- தமிழக அரசு முடிவு!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
தமிழகத்தில் தற்பொழுது பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அதாவது ஊரடங்கு 5.0 அமலில் உள்ளது. இதில் பல துறையினருக்கும் தளர்வு அளிக்கப்பட்டது. இந்த தளர்வுகள் பள்ளிகள் திறப்பதற்கும் பொருந்தும். இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கவுள்ளதாக தெரிவித்தனர். மேலும், பொதுமுடக்கத்தால் அடுத்த கல்வியாண்டு தொடங்குவதில் தாமதம் ஏற்படும் சூழலால் இந்த முடிவை பள்ளி கல்வித்துறை அமைச்சகம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.