#BREAKING: முழு ஊரடங்கு நாட்களில் உணவகங்களில் பார்சல் சேவைக்கு அனுமதி..!
காலை 6 முதல் 10 மணி, மதியம் 12 முதல் 3 மணி, மாலை 6 முதல் இரவு 9 வரை பார்சல் முறையில் உணவு வாங்கலாம்.
தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
Swiggy, Zomato போன்ற மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. சாலையோர உணவகங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.