தமிழக தொழில் வளர்ச்சிக்கு 2-வது விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம் என தமிழக அரசு அறிக்கை.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 24 ஆண்டுகளாக இரண்டாவது விமான நிலையம் குறித்து பேசப்பட்டாலும், தற்போதுதான் அதற்கான அமைவிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதை மத்திய விமான போக்குவரத்துக்கு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
தொழில்நுட்ப ரீதியில் விமான நிலையம் அமைய சாத்தியமான இடங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டதுதான் பரந்தூர். தமிழக தொழில் வளர்ச்சிக்கு 2-வது விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம். பரந்தூரில் ரூ.20,0000 கோடி முதலீட்டில் 2028-ம் ஆண்டிற்குள் விமான நிலைய கட்டி முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4700 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
எதிர்கால மக்கள் தொகை பெருக்கம், தொழில்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. விமான நிலையம் அமைக்க முதலீடு செய்யும் ரூ.100க்கு வருமானவாக ரூ.325 தமிழ்நாட்டுக்கு வருமானமாக கிடைக்கும். தமிழ்நாட்டுக்கு பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது.
எனவே, ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கை எட்ட இரண்டாவதி விமான நிலையம் அவசியம். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சரக்கு முனைய நெரிசல் காரணமாக பெங்களூரு விமான நிலையத்துக்கு சரக்கு செல்கிறது. தமிழ்நாட்டின் வாய்ப்புகளை ஐதராபாத் விமான நிலையமும் தட்டிப்பறிப்பதாக தமிழ்நாடு அரசு அறிக்கையில் விளக்கமளித்துள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…