பரந்தூர் விமான நிலையம் – டெண்டர் கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை பரந்தூர் விமான நிலையம் டெண்டர் அவகாசம் நீட்டிப்பு.
சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதற்காக பரந்தூரை சுற்றி உள்ள ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு, எடையார்பாக்கம், தண்டலம் உள்ளிட்ட 13 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு, தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையை தயார் செய்யுமாறு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் இரண்டாம் விமான நிலையத்திற்கு விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையை தயார் செய்ய ஆலோசகரை முடிவு செய்யும் டெண்டர் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 6-ஆம் தேதி வரை அவகாசம் இருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக 27-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.