பரந்தூர் விமான நிலையம் 100% கட்டாயம் வரும் – அமைச்சர் ராமசந்திரன்
மதுரை விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கும் பணிகள் 99% நிறைவடைந்துள்ளது அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
பரந்தூர் விமான நிலையம் அமைக்க இடம் வழங்குவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், இதுகுறித்து அமைச்சர் ராமச்சந்திரன் அவர்கள் கூறுகையில், ‘மதுரை விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கும் பணிகள் 99% நிறைவடைந்துள்ளது.
பரந்தூர் விமான நிலையம் 100% கட்டாயம் வரும். செய்யின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம். விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசில் கரும்பு வழங்கப்பட உள்ளது. எந்த பிரச்சினையானாலும் மக்களிடம் கலந்து கொண்டு பேசி நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என தெரிவித்துள்ளார்.