சென்னை பரங்கிமலை ரயில் நிலைத்தில் கல்லூரி மாணவி சத்யாவை, சதீஸ் எனும் இளைஞன் ரயில் முன்பு தள்ளிவிட்டதில் மாணவி உயிரிழந்தார். கொலையாளி சதீஷ் தப்பியோட்டம்.
சென்னையில் இன்று மதியம் 1 மணி அளவில் பரங்கி மலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு இளைஞர் கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த சத்யா (வயது 20) எனும் கல்லூரி மாணவியை, அதே பகுதியை சேர்ந்த சதீஷ் எனும் இளைஞன் இன்று மதியம் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் வரும் சமயத்தில் தள்ளிவிட்டுள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தில் ரயில் முன் விழுந்த மாணவி சத்யா தலை துண்டித்து உயிரிழந்தார். கொலை செய்த சதீஷ் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டார்.
ரயில் நிலையத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனை அடுத்து ரயில் நிலையத்தில் வந்துகொண்டிருந்த மின்சார ரயிலின் முன்பு, சத்யாவை சதீஷ் தள்ளி விட்டுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது .
ஒருதலை காதல் விவகாரம் தொடர்பாக இந்த கொலை நடைபெற்றதா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய சதீஷை போலீசார் தேடி வருகின்றனர்.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…