#BREAKING : துணை ராணுவப் படை தமிழகம் வந்தடைந்தன..!
தமிழக சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப் படை 4,500 பேர் சென்னை வந்தடைந்தனர்.
இந்த மாத இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏப்ரல் மாத இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், முதற்கட்டமாக மத்திய ஆயுதப்படை 45 கம்பெனி போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழக வருவதாகவும், இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளதாக சமீபத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்தார். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிக்காக துணை ராணுவப் படை தமிழகம் வருகை தந்துள்ளனர். முதற்கட்டமாக 4,500 பேர் சென்னை வந்தடைந்தனர். ஒரு கம்பெனியில் 100 முதல் 150 வீரர்கள் இருப்பார்கள் என கூறப்படுகிறது.
சட்ட பேரவை தேர்தலுக்கான பாதுகாப்பு தொடர்பான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.