பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு..!

Published by
Sharmi

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் சொந்த ஊருக்கு வந்த நிலையில் அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மாரியப்பன் தொடந்து இரண்டாவது முறையாக பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார். தற்போது நடந்து முடிந்த பாராலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில் 1.86 மீட்டர் தாண்டி வெள்ளி பதக்கம் வென்றார்.

தற்போது இவரது சொந்த ஊரான சேலம் அருகே உள்ள பெரிய வடகம்பட்டிக்கு திரும்பியுள்ள மாரியப்பன் தங்கவேலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. தீவட்டிப்பட்டி முதல் பெரிய வடகம்பட்டி வரை இவருக்கு மேளதாள வரவேற்பு கொடுத்துள்ளனர். பின்னர், இவரை மாவட்ட ஆட்சி தலைவர் கார்மேகம் பூங்கொத்து கொடுத்து, பொன்னாடை அணிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் பிற அரசியல் தலைவர்களும் மாரியப்பன் தங்கவேலுவை வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து அவருக்கு மலர் கிரீடம் அணிவித்து ஊர் மக்கள் தோளில் சுமந்து மலர் அலங்காரம் செய்யப்பட்ட திறந்தவெளி வாகனத்தில் கொண்டு சேர்த்தனர். மேலும், இவர் இந்த வாகனம் மூலமாக 7 கி.மீ. தொலைவு உள்ள அவரது கிராமத்திற்கு செல்ல இருக்கிறார். வழி எங்கிலும், மலர் தூவி மேளதாளங்களோடு இவரை வரவேற்று வருகின்றனர்.

Recent Posts

மழையும் இருக்கு வெயிலும் இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

மழையும் இருக்கு வெயிலும் இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…

21 minutes ago

அன்றே சூர்யாவை கணித்த ஜோதிடர்! ரெட்ரோ விழாவில் உண்மையை உடைத்துவிட்ட சிவகுமார்!

சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…

37 minutes ago

“தவெக ஐடி விங் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.,” தொண்டர்களுக்கு விஜய் ‘வீடியோ’ அட்வைஸ்!

சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…

1 hour ago

சூழ்நிலை புரியாதா? விராட் கோலி, படிதாரை சீண்டிய வீரேந்தர் சேவாக்!

பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

1 hour ago

தேர்தலுக்கு தயாராகுங்கள்.., தவெக கட்சியினருக்கு சிறப்பு பயிற்சி அளித்த ஆதவ் அர்ஜுனா!

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…

2 hours ago

அது ஃபேக்…ரூ.2,000 மேல் பணம் அனுப்பினால் ஜிஎஸ்டி வரியா..? உண்மையை உடைத்த அரசு!

டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…

2 hours ago