இன்னும் சற்று நேரத்தில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல்…!
திமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற பின், இன்று தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
திமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற பின், தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் இன்னும் சற்று நேரத்தில் செய்யப்படுகிறது. இன்று காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், தமிழக பட்ஜெட் கூட்ட தொடர் இன்று தொடங்கி செப்.21ம் தேதி வரை நடைபெறுகிறது. நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். அந்த வகையில், தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதனையடுத்து, பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 16-ம் தேதி தொடங்குகிறது.
19-ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கும் பட்ஜெட் மீதான விவாதத்தில் கடைசி நாளில் பதிலுரை அளிக்கப்படுகிறது. மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகு தாக்கலாகும் முதல் நிதி நிலை அறிக்கை என்பதால் பொதுமக்களிடம் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.