ஆகஸ்ட் 13ல் முதன்முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல்..!
13-ஆம் தேதி இ-பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யும்போது நிதியமைச்சர் பட்ஜெட் புத்தகங்களை கூடுதலாக அச்சடிக்கப்பட்டு முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மற்றும் அனைத்து எம்.எல்.ஏக்கள் , பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும். ஆனால் தற்போது முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று கடந்த மாதம் 5-ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் குழுவின் முதல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
இதனால், வருகின்ற 13-ஆம் தேதி இ-பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, அனைத்து எம்.எல்.ஏக்கள் இருக்கைகளுக்கு மினி கணினி பட்ஜெட் விவரங்கள் தெரியும் வகையில் வசதி அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இதுகுறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.