தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அக் 31ந்தேதி காலமானார்.மறைந்த அமைச்சர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் மறைவைத் அடுத்து அத்தொகுதி தொகுதி காலியாகிவிட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சபாநாயகர் ப.தனபால் வெளியிட்டுள்ளார்.
சபநாயகரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் இதனுடன் 4 தொகுதிகள் காலியாக உள்ளது விவரங்கள்:-கடந்த பிப்ரவரி மாதம் திருவொற்றியூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி, மற்றும் குடியாத்தம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. காத்தவராயன் ஆகியோர் மரணம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, 2 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் கொரோனா பரவலை காரணமாக இடைத்தேர்தலை தற்போது நடத்த முடியாத சூழல் நிலவுவதாக இந்திய தேர்தல் ஆணையதிற்கு தமிழக அரசு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது. கடிதத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மரணம் அடைந்தார்.
எனவே இத்தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 6 மாதம் முடிவடையவிலை அதே நேரத்தில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு இன்னும் 5 மாதங்களுக்குள் சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பாபநாசம் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டாலும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
சென்னை : 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் நாடு முழுவதும் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள மத்திய பாஜக அரசு…
18-வது சீசன் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடந்து வரும் நிலையில், 3 போட்டிகள் முடிவடைந்திருக்கிறது. அந்த 3 போட்டிகளிலும்…
சென்னை : திருச்சி மாவட்டத்தில் நேற்று பாஜக சார்பில் தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக பாஜக…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடும் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் இதற்கு முன்னதாக கடந்த 2018-ஆம்…
சென்னை : தமிழ்நாடு தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில்…
சென்னை : சென்னை சேப்பாக்கத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் வித்தியாயசத்தில் வீழ்த்தியது. …