#அறிவிப்பு-பாபநாசம் தொகுதி காலியானது..அதிகாரப்பூர்வ வெளியீடு

Default Image

தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அக் 31ந்தேதி காலமானார்.மறைந்த அமைச்சர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் மறைவைத் அடுத்து அத்தொகுதி தொகுதி காலியாகிவிட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சபாநாயகர் ப.தனபால் வெளியிட்டுள்ளார்.

சபநாயகரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் இதனுடன் 4 தொகுதிகள் காலியாக உள்ளது விவரங்கள்:-கடந்த பிப்ரவரி மாதம் திருவொற்றியூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி, மற்றும் குடியாத்தம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. காத்தவராயன் ஆகியோர் மரணம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து, 2 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில்  அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் கொரோனா பரவலை காரணமாக இடைத்தேர்தலை தற்போது நடத்த முடியாத சூழல் நிலவுவதாக இந்திய தேர்தல் ஆணையதிற்கு தமிழக அரசு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது. கடிதத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் சேப்பாக்கம்  திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மரணம் அடைந்தார்.

எனவே  இத்தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 6 மாதம் முடிவடையவிலை அதே நேரத்தில் சேப்பாக்கம்  திருவல்லிக்கேணி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு இன்னும் 5 மாதங்களுக்குள் சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பாபநாசம் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டாலும்  இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்