அமெரிக்காவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு "தங்கத் தமிழ் மகன்" விருது..!
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , தேனி மாவட்ட எம்.பி ரவீந்திரநாத் குமார் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று மாலை சிகாகோவில் குழந்தைகள் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் இன்று ஓ.பன்னீர்செல்வம் சிகாகோவில் நடைபெற்ற உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் பாராட்டு விழாவில் கலந்து கொண்டார்.அப்போது அவருக்கு “தங்கத்தமிழ் மகன்” விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் தேனி மாவட்ட எம்.பி ரவீந்திரநாத் குமாரும் கலந்து கொண்டார்.