2 மாத சம்பளம் தராததால் கடையின் முன்பு தீக்குளித்த நபர்!அதிர்ச்சி அடைந்த பாண்டி பஜார்!
சென்னை பாண்டி பஜாரில் உள்ள அஞ்சப்பர் உணவகத்தில் வேலை பார்த்து வந்தவர் உதய சங்கர்.இவருக்கு கடந்த 2 மாதங்காளாக ஹோட்டல் நிர்வாகம் சம்பளம் வழங்காமல் இருந்துள்ளது.
இந்நிலையில் தனக்கு பணம் தேவைப்படுவதாகவும் அதனால் தனக்கு தர வேண்டிய சம்பளத்தை தருமாறு கேட்டுள்ளார்.ஆனால் ஹோட்டல் நிர்வாகமோ பணம் தர முன்வரவில்லை என கூறப்படுகிறது.
அதனால் மனம் உடைந்த உதய சங்கர் நேற்று இரவு பாண்டி பஜாரில் உள்ள அஞ்சப்பர் உணவகம் வாசலின் முன்பு தீக்குளித்துள்ளார்.இதனை பார்த்த அக்கம்பக்கத்தினரும் அஞ்சப்பர் உணவகத்தில் பணிபுரிந்தவர்களும் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பலத்த காயத்துடன் அனுமதிக்கப்பட்ட உதய சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.