மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பஞ்சாயத்து ராஜ் நாடாளுமன்ற நிலை குழு தலைவர் கனிமொழி எம்.பி ஆய்வு.!
மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நாடாளுமன்ற நிலை குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு இருந்த கனிமொழி எம்.பி தலைமையில் உள்ள நிலை குழு உறுப்பினர்களில் 11 எம்.பி.க்கள் இன்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆய்வு செய்தனர்.
பஞ்சாயத்து ராஜ் நாடாளுமன்ற நிலை குழு மூலம் இந்தியாவில் உள்ள கிராமங்கள் ஆய்வு செய்யப்பட்டு , அதனை மேம்படுத்த தேவைப்படும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ராஜ்யசபா எம்பியாக கனிமொழி பொறுப்பில் இருந்த சமயத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவெங்கடேசபுரம் எனும் கிராமத்தை தத்தெடுத்து அங்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து சிறப்பாக பணியாற்றி இருந்தார்.
இதன் காரணமாகவே மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நாடாளுமன்ற நிலை குழுவின் தலைவராக திமுக எம்பி கனிமொழி மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் மக்களவை உறுப்பினர்கள் 21 எம்பிகளும், மாநிலங்களவையில் இருந்து 10 எம்பிகளும் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த பஞ்சாயத்து ராஜ் நாடாளுமன்ற நிலை குழுவில் இருந்து தான் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 11 எம்பிக்கள் ஆய்வு செய்தனர். ஆய்வு முடிந்த பிறகு பெண் எம்.பி.க்களுக்கு திமுக எம்பி கனிமொழி வளையல் வாங்கி கொடுத்தார்.