ஊராட்சி மன்ற தலைவர் தரையில் அமர வைக்கப்பட்ட விவகாரம்! ஊராட்சி மன்ற செயலாளர் சிந்துஜா சஸ்பெண்ட்!

ஊராட்சி மன்ற தலைவர் தரையில் அமர வைக்கப்பட்ட விவகாரத்தில், ஊராராட்சி மன்ற செயலாளர் சஸ்பெண்ட்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்குதிட்டை பெண் ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றி வருபவர் ராஜேஸ்வரி. இவர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த ஜூலையில் நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இவர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, தெற்குதிட்டை ஊராட்சி மன்ற செயலாளர் சிந்துஜாவிடம் கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்காரவ் விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து, சிந்துஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.