ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் சுகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்குதிட்டை பெண் ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றி வருபவர் பட்டியலினத்தை சேர்ந்த ராஜேஸ்வரி. அண்மையில் நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.இது குறித்து ராஜேஸ்வரி புவனகிரி காவல்துறையிடம் புகார் அளித்தார்.
இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால், ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, தெற்குதிட்டை ஊராட்சி மன்ற செயலாளர் சிந்துஜாவிடம் கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்காரவ் விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து, சிந்துஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்பு சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர் சிந்துஜாவை எஸ்.சி., எஸ்.டி., தடுப்பு சட்டத்தின் கீழ் புவனகிரி காவல்துறை கைது செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மோகன்ராஜ் தலைமறைவாக உள்ளார்.
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…