லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு!

prison

கொல்லிமலை அருகே லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் பொன்னம்மாளுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2002ல் இலவச வீடு கட்டும் திட்டத்தில் காசோலை வழங்க ரூ.400 லஞ்சம் பெற்ற வழக்கில் ஊராட்சி மன்ற தலைவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2002-ல் குண்டூர்நாடு ஊராட்சி மன்ற தலைவராக இருந்த பொன்னம்மாளுக்கு சிறை தண்டனை விதித்து நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்