ஊராட்சி கட்டுமான அனுமதி அதிகாரம் – புதிய அரசாணை வெளியீடு!
10,000 அடிப்பரப்புக்கு கட்டுமான அனுமதித்தர ஊராட்சிகளுக்கு அதிகாரம் குறித்தும் தமிழக அரசு விளக்கம்.
தமிழ்நாட்டில் ஊராட்சி கட்டுமான அனுமதி அதிகாரம் குறித்து விளக்கி தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 10,000 அடிப்பரப்புக்கு கட்டுமான அனுமதித்தர ஊராட்சிகளுக்கு அதிகாரம் தரும் அரசாணையை விளக்கில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாகன நிறுத்துவதற்காக ஒதுக்கப்படும் இடத்தின் பரப்பு, அனுமதி தரப்படும் 10,000 சதுர அடிக்குள் வராது என விளக்கமளித்துள்ளது.
10,000 சதுர அடி பரப்பளவு முழுமையும் குடியிருக்கும் பகுதியே குறிக்கும். காலி கீழ்தளம் மற்றும் 3 மாடிகள் கொண்ட, 12 மீட்டர் உயரமுள்ள 10,000 சதுர அடி பரப்புள்ள குடியிருப்புக்கான கட்டட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தரைத்தளம், 2 மாடிகள் கொண்ட, 10,000 சதுர அடி பரப்புள்ள குடியிருப்புக்கான கட்டட அனுமதி தர ஊராட்சிக்கு அதிகாரம் உள்ளது என கிரெடாய் கோவை கிளை, இந்திய கட்டுனர்கள் சங்கத்தின் கோரிக்கையை அடுத்து புதிய விளக்கத்தை தந்துள்ளது தமிழக அரசு.