பாம்பன் ரெயில் தூக்கு பாலத்தில்கோளாறு – 22 பெட்டிகளுடன் பயணிகளின்றி ரயில் இயக்கம்!
பாம்பன் ரெயில் தூக்கு பாலத்தில்கோளாறு இருந்ததால், 22 பெட்டிகளுடன் பயணிகளின்றி ரயில் இயக்கம் செய்து பார்க்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் 70 க்கும் மேற்பட்ட இடங்களில் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை சிறப்பு ரயில் அந்த தூக்கு பாலத்தில் சென்ற பொழுது சென்சார் பொருத்தப்பட்டிருந்த பகுதியில் இருந்து சத்தம் வந்துள்ளது. இதுகுறித்து ரயில்வே பொறியாளர் குழுவினர் தூக்கு பாலத்தில் ஆய்வு மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் என்ன கோளாறு காரணமாக அந்த சத்தம் வந்தது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே பயணிகளின் பாதுகாப்புக்காக நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட வேண்டிய ரயில் பயணிகள் இன்றி வெறும் பெட்டிகளுடன் தூக்கு பாலம் வழியாக இயக்கப்பட்டு, பின்பு மண்டபம் கொண்டு செல்லப்பட்டடு அங்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது.
என்ன கோளாறு என்பதை கண்டறிய வேண்டும் என்பதற்காக நேற்று தென்னக ரயில்வே பொறியாளர்கள் குழுவினருடன் இணைந்து பாம்பன் ரயில்வே தூக்கு பாலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். காலை 11 மணியிலிருந்து மாலை 3 மணி வரை நடந்துள்ள இந்த போராட்டத்தில் சத்தம் கேட்ட பகுதியில் 22 பெட்டிகளுடன் கூடிய பயணிகள் இல்லாத ரயில் தூக்குப் பாலம் வழியாக இயக்கப்பட்டு பார்க்கப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ரயில் பெட்டிகள் தூக்கு பாலத்தில் பலமுறை இயக்கி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். முழுமையாக இன்னும் கோளாறுகாள் குறித்து தெரிவிக்க முடியாவிட்டாலும் தொடர்ந்து ஆய்வு நடத்த உள்ளோம். பயணிகளுடன் ரயில் இயக்குவது குறித்து தற்போதைக்கு அனுமதி அளிக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.