பாமக தனித்து போட்டி – அரசியல் ரீதியாக இது பெரிய விஷயம் அல்ல – பாமக செய்தி தொடர்பாளர் பாலு
பாமக தனித்து போட்டியிட வேண்டும் என்பதே நிர்வாகிகளின் விருப்பம் என பாமக செய்தி தொடர்பாளர் பாலு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் தேர்தல் பையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பாமக தனித்து போட்டி
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாமக கட்சியின் உயர்நிலை கூட்டம் நேற்று மாலை நடைபெறுகிறது . அக்கட்சி தலைவர் ஜி.கே மணி ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டிடுவதாக நேற்று அறிவித்திருந்த நிலையில், இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள், உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று குறிப்பிட்ட இடங்களில் வென்று பாமக வாக்கு சதவீதத்தை நிரூபிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
இது பெரிய விஷயம் அல்ல
பாமக செய்தி தொடர்பாளர் பாலு அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, பாமக தனித்து போட்டியிட வேண்டும் என்பதே நிர்வாகிகளின் விருப்பம்; உடனடியாக வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டியது இருப்பதால், கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த கால அவகாசம் இல்லை, அதனால் தனித்துப் போட்டியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக உடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக தொடர்ந்து இருக்கிறது. பாமக தனித்து போட்டியிடுவது அரசியல் ரீதியாக பெரிய விஷயம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.