பாமக – அதிமுக கூட்டணி!!ட்விட்டரில் ட்ரெண்டாகும் #மண்டியிட்டமாங்கா ஹஷ்டாக் !!
- மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் பாமக மற்றும் அதிமுக கூட்டணி பேச்சு நடைபெற்றது.
- அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
- பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ட்விட்டரில்
#மண்டியிட்டமாங்கா என்ற ஹஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது
ட்விட்டரில் #மண்டியிட்டமாங்கா என்ற ஹஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சு அதிகரித்து வருகிறது.அதேபோல் பாமகவும் கூட்டணி என்று தகவல் வெளியானது.
இந்நிலையில் இன்று மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சென்னை கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்றனர்.
கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணியும் சென்றனர்.அங்கு கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. 21 தொகுதிகளில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளித்தது.
இந்த அதிமுக -பாமக கூட்டணிக்கு ஒரு புறம் ஆதரவு இருந்தாலும் மறுபுறம் எதிர்ப்பும் கிண்டலும் அதிகமாக உள்ளது .குறிப்பாக சமூக வலைத்தளமான ட்விட்டரில் #மண்டியிட்டமாங்கா என்ற ஹஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.இதில் அதிமுக-பாமக கூட்டணி குறித்து மீம்ஸுகள் பரவி வருகின்றது.