பணிப்பெண் துன்புறுத்தல் விவகாரம்.. கொத்தடிமை முறை.? போராட்டத்தை அறிவித்த அதிமுக.!
பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மற்றும் அவரது மனைவி மெர்லினா வசித்து வரும் திருவான்மியூர் வீட்டில் பணிப்பெண்ணாக விழுப்புரம், உளுந்தூர் பேட்டையை சேர்ந்த சிறுமி வீட்டு பணிப்பெண் வேலைக்கு சென்று இருந்தார். இவர் சில நாட்களுக்கு முன்னர் தன்னை, மெர்லினா, ஆண்டோ ஆகியோர் அடித்து கொடுமை படுத்தியதாகவும், சாதி பெயர் சொல்லி திட்டியதாகவும் வீடியோ மூலம் தெரிவித்து இருந்தார்.
பணிப்பெண் துன்புறுத்தல் விவகாரம் : திமுக எம்எல்ஏ மகனை பிடிக்க 3 தனிப்படைகள்.!
இந்த வீடியோ ஆதாரங்களை கொண்டு, சிறுமியிடம் நேரடி வாக்குமூலம் பெற்ற நீலாங்கரை மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மற்றும் அவரது மனைவி மெர்லினா மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், குழந்தை பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் விசாரணைக்கு சரணடையாத காரணத்தால், தலைமறைவாக இருக்கும் அவர்களை பிடிக்க 3 தனிப்படைகளையும் காவல்துறையினர் அமைத்தனர்.
இந்நிலையில், பல்லாவரம் பணிப்பெண் விவகாரம் தொடர்பாக அதிமுக போராட்டம் நடத்த உள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அதில், நாட்டில் தடைசெய்யப்பட்ட கொத்தடிமை முறையை திமுக எம்எல்ஏ மகன் வீட்டில்செயல்படுத்தி வருவதாக குற்றம் சாட்டபட்டது.
பணிப்பெண்ணை சாதி பெயர் சொல்லி திட்டி, சிகெரட்டால் சூடு வைத்து , அடித்து துப்புறுதியதற்கு அதிமுக கடும் கண்டனத்தை பதிவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளார். மேலும் , இந்த வழக்கில் எம்எல்ஏ மகன் ஆண்டோ மற்றும் மெர்லினா மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு, வரும் பிப்ரவரி 1ஆம் தேதி மாவட்டந்தோறும் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூரத் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத விடியா திமுக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் :… pic.twitter.com/EhjrQ8RJ6B
— AIADMK (@AIADMKOfficial) January 24, 2024