நாகை;தஞ்சை;திருவாரூர் -பாதுகாப்பட்ட வேளாண் மண்டலம்..வருகிறது தனி சட்டம்-அறிவித்தார் முதல்வர்
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.மேலும் வேளாண் மண்டலங்களை பாதுகாக்க தனிச் சட்டம் கொண்டு வரப்படும்;ஹைட்ரோகார்பன் எடுக்க தமிழக அனுமதி தராது என்றும் அறிவித்துள்ளார்.
இன்று சேலத்தில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் முதலில் சேலத்தில் வாழப்பாடியில் உள்ள காட்டுவேப்பேரிபட்டியில் புதிய அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார்.இதன்பின் அம்மாவட்டத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் பழனிசாமி பேசினார் அதில் காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அமைக்கப்படும் என அறிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் ருவண்ணாமலை,திருச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக3 கால்நடை தீவன தொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளது.
கால்நடை வளர்ப்பு தொழிலானது அதிக வருவாய் மட்டுமல்லாமல் லாபம் ஈட்டும் தொழிலாக உள்ளது. கால்நடை துறைக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் கிராமப் பொருளாதாரத்தை மேம்பாடுத்த கால்நடை வளர்ப்பு திட்டம் உதவுகிறது. என்று பேசிய முதல்வர் தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அமைக்கப்பட உள்ளது.மேலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு தனிச்சட்டம் பிரத்யோகமாக கொண்டு வரப்படும்.காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி இல்லை என்று தெரிவித்தார்.