சபாநாயகரை மீண்டும் சந்திக்கும் பழனிசாமி தரப்பு!
சபாநாயகரை மீண்டும் சந்திக்க எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு.
எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகரை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நாளை சந்தித்து பேசவுள்ளனர். சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் இருக்கையில் பன்னீர்செல்வம் அமர்ந்துள்ளது குறித்து சபாநாயகரிடம் முறையிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.