பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு – தேர்தல் ஆணையம் பதில்மனு..!

Default Image

ஒரு கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிடுவதில்லை என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு. 

ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தலில் அதிமுக இரு அணிகளாக போட்டியிட உள்ளது. தொடர்ந்து அதிமுகவில் குழப்பங்கள் நீடித்துவரும் நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு இரு அணிகள் மத்தியிலும் நிலவுகிறது.

இந்த நிலையில், கடந்த 29-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு  இரட்டை இலை சின்னத்தை தங்களது அணிக்கு ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.

மேலும் அதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்ட வேட்பு மனுவையும், பொதுக்குழு தீர்மானங்களையும் தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மூன்று நாட்களுக்குள் தேர்தல் ஆணையமும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் பதில் அளிக்க கோரி பிப்ரவரி 3-ஆம் தேதிக்கு விசாரணையை  ஒத்திவைத்தனர்.

ops

இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவுக்கு  ஓபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அங்கீகரிக்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை சேர்க்க கோருவதையும், பொதுக்குழு விவகாரத்தில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இடையீட்டு மனு தாக்கல் செய்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இபிஎஸ்-ன் இந்த மனு நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்தும் வகையில் இருப்பதாகவும், எனவே எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

election commission

இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் இடையீட்டு மனுவுக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுப்பது, ஓபிஎஸ் , இபிஎஸ் வேட்பாளர்களை ஏற்பது தேர்தல் நடத்தும் அலுவலரின் முடிவுக்கு உட்பட்டது. இரட்டை இலை சின்னம் குறித்த எந்த வழக்கும் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்படவில்லை.

பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் உள்ளதால் கடந்த ஆண்டு ஜூலை 11 இல் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட விதி மாற்றங்கள் கருத்தில் கொள்ளவில்லை. ஒரு கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிடுவதில்லை. வாக்காளர் பட்டியலை தயார் செய்வது, தேர்தலை கண்காணிப்பது ஆகியவையே தேர்தல் ஆணையத்தின் பணி. கையெழுத்திட அதிகாரம் உள்ளவர் என ஆவணங்களில் உள்ளவரின் கையெழுத்தையே ஏற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்