அதிமுக என்ற கட்சியை உடைத்து அழகு பார்க்கும் அசிங்கமான தலைவராக பழனிசாமி – ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி
அதிமுக சேர்ந்தால் தான் ஜெயிக்க முடியும். இல்லையென்றால், எதிரிகள் தான் ஜெயிப்பார்கள் என புகழேந்தி பேட்டி.
ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுகவின் நலன் கருதி ஓபிஎஸ் இணைப்புக்கு தயாராக உள்ளார். அதிமுக என்ற கட்சியை உடைத்து அழகு பார்க்கும் அசிங்கமான தலைவராக பழனிசாமி உள்ளார் என குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக 4 பிரிவுகளாக தொடருமானால், திமுகவிற்கு தேர்தலே தேவையில்லை. அதிமுக சேர்ந்தால் தான் ஜெயிக்க முடியும். இல்லையென்றால், எதிரிகள் தான் ஜெயிப்பார்கள். அதனால் தான், எடப்பாடியை வெளியே தள்ளிவிட்டு,வேலுமணியை பொறுப்பேற்குமாறு சொன்னேன் என தெரிவித்துள்ளார்.