“அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அதிமுகவின் துரோக வரலாறு பழனிசாமி”..முதல்வர் காட்டம்!

நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் வரை, டங்க்ஸ்டன் சுரங்கத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

edappadi palanisamy mk stalin

சென்னை : மத்திய அரசு மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக வெளியான தகவலை தொடர்ந்து இன்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானித்தின் மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ” சுரங்கம் அமைத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மக்கள் போராட்டம் நடத்தியதன் பிறகு தான், முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார். ஒப்பந்தம் கோரிய போதே, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து இருந்தால், இன்று அதனை தடுத்து நிறுத்தி இருக்கலாம். ஆனால், அதனை தமிழக அரசு ஆரம்பத்திலேயே செய்யவில்லை” என தெரிவித்து இருந்தார்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக மு.க.ஸ்டாலின் ” மத்திய அரசு என்ன செய்தாலும் சரி,  இந்த அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி தராது. அதற்கு வாய்ப்பே இல்லை. இந்த விவகாரத்தில் திட்டவட்டமாக இருக்கிறோம். நான் முதலமைச்சராக இருக்கும் வரை, ஒன்றிய அரசு இத்திட்டத்தை கொண்டு வர முடியாது” என தெரிவித்து இருந்தார்.

அதனைத்தொடர்ந்து தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் பழனிசாமி அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அ.தி.மு.க.வின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார்.

சட்டப்பேரவையில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன்…தமிழ்நாட்டுக்கு ஊறு விளைவிக்கும் எந்தத் திட்டத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது” என சட்டப்பேரவையில்  பேசிய காணொளியை வெளியிட்டு திட்டவட்டமாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்