ஓபிஎஸ்-ஐ தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் ஆணையத்தில் முறையீடு!
தன்னை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையத்தில் முறையீடு.
அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்குமாறு தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார். கர்நாடகா சட்டப்பேரவையில் தேர்தலில் புலிகேசி நாடரில் அதிமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். நாளை வேட்புமனு தாக்கல் முடிவதால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு, தீர்மானங்களை இன்றே அங்கீகரித்து முடிவு அறிவிக்க வேண்டும்.
அதிமுக கட்சி விதிகளை மாற்றியதை உடனடியாக ஆணையம் ஏற்க வேண்டும் என கர்நாடகா தேர்தலில் போட்டியிடுவதை சுட்டிக்காட்டி இபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வலியுறுத்திய இபிஎஸ் கோரிக்கை பற்றி தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது. அதிமுக சட்ட விதிகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்தி வரும் ஆலோசனையில் இபிஎஸ் தரப்பு முறையீடு செய்துள்ளது.
எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது என ஓ.பன்னீர்செல்வவம் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட நிலையில், தற்போது அங்கீகரிக்க வேண்டும் என்று இபிஎஸ் தரப்பு முறையிட்டு உள்ளது. அதன்படி, பழனிசாமியை அங்கீகரிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ள நிலையில், முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், இன்று மாலைக்குள் இபிஎஸ்-ஐ அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்குமா? என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.