#BREAKING : இன்று மாலை தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் முதல்வர் பழனிசாமி உரை!

தொலைக்காட்சி மூலம் தமிழக மக்களுக்கு உரையாற்றுகிறார் முதலமைச்சர் பழனிசாமி.
தமிழகத்தை பொருத்தவரை தற்போது வரைகொரோனாவால் 3550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று ஒரே நாளில் மட்டும் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.சென்னையில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,724 ஆக அதிகரித்துள்ளது.சென்னையை பொருத்தவரை கோயம்பேடு சந்தை மூலமாக கொரோன பரவி வருகிறது.இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது .இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ,மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காட்சி மூலம் தமிழக மக்களுக்கு உரையாற்றுகிறார் முதலமைச்சர் பழனிசாமி.
லேட்டஸ்ட் செய்திகள்
மீண்டும் CSK கேப்டனாகும் ‘தல’ தோனி? மைக் ஹஸி சூசக பதில்!
April 4, 2025