இன்று மாலை உரையாற்றுகிறார் முதல்வர் பழனிச்சாமி!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய பின், தமிழக முதல்வர் பழனிச்சாமி, இன்று மாலை 6 மணிக்கு மக்களிடையே உரையாற்ற உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒரே நாளில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வரும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், ஆட்சியர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தின் பின், முதல்வர் பழனிச்சாமி இன்று மாலை 6 மணிக்கு மக்களிடையே உரையாற்ற உள்ளார். இந்த உரையில் ஊரடங்கு குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என தகவல் .