தன் தந்தையின் மரணத்தை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்! – காசாளரின் மகன் நீதிமன்றத்தில் மனு!
சில தினங்களுக்கு முன்னர், தமிழகத்தில் லாட்டரி அதிபர் மார்ட்டின் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கோயம்புத்தூரில் உள்ள மார்டினிக்கு சொந்தமான ஹோமியோபதி கல்லூரியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அங்கு காசாளாராக இருந்த பழனிசாமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, விசாரணை முடிந்து மறுநாள் அவர் சடலமாக மீட்கப்பட்டார். இது தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனால் வருத்தமடைந்த காசாளர் பழனிச்சாமியின் மகன் ரோஹிண் குமார், உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார். அதில், தனது தந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டு, அதனால் அவருடைய மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
DINASUVADU