திடீரென காரை விட்டு இறங்கிய முதல்வர் பழனிசாமி! மக்கள் உற்சாகம்!

முதல்வர் பழனிசாமி, திடீரென காரை நிறுத்தி, மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழக மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும், வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பித்து அரசு கூறும் வழிமுறைகளை கைக்கொள்ளுமாறும் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி, சேலத்தில் இருந்து கோவை சென்றுகொண்டிருந்த சென்று கொண்டிருந்த போது, திருவாச்சி என்ற கிராமத்தில் மக்கள் முகக்கவசம் அணியாமல் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த முதல்வர் பழனிசாமி, திடீரென காரை நிறுத்தி, அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
முதலமைச்சரை கண்டதும் அப்பகுதி மக்கள் உற்சாகம் அடைந்த நிலையில், அங்கிருந்த சிறுவர் சிறுமியரிடம் கல்வி குறித்து கேட்டறிந்து, அனைவரும் முகக்கவசம் அணியுமாறு அறிவுரை வழங்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வேளாண் பட்ஜெட் 2025 : உழவரைத் தேடி புதிய தொழில்நுட்பங்கள்..,
March 15, 2025
முதல் பரிசு ரூ.1.5 லட்சம்…நவீன கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பட்ஜெட்டில் வந்த குட் நியூஸ்!
March 15, 2025
தமிழ் படத்தை இந்தியில் ஏன் டப்பிங் செய்யுறீங்க? பரபரப்பை கிளப்பிய பவன் கல்யாண்..பிரகாஷ் ராஜ் பதிலடி!
March 15, 2025
TNAgriBudget2025 : வேளாண் பட்ஜெட் தாக்கல்…நேரலை அப்டேட் இதோ!
March 15, 2025