வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடியை வழங்கினார் முதல்வர் பழனிசாமி

- சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.
- வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி வழங்கினார் முதல்வர் பழனிசாமி.
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்த நிலையில் மணல் கொள்ளையர்களை பிடிப்பதற்காக கன்னியாகுமரி மாவட்ட போலீசார் பல நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழக -கேரள எல்லையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வாகனங்களை சோதனை செய்து பின்னர் அனுப்புகின்றனர்.
இந்த சோதனைச் சாவடியில் தினமும் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றன. இதையெடுத்து நேற்று முன்தினம் இரவு சோதனைச்சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் பணியில் இருந்துள்ளார்.அப்பொழுது சோதனை சாவடி அருகில் ஒரு கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய மர்ம நபர்கள் பணியில் இருந்த வில்சனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றனர்.இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.எனவே வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில் இன்று வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடியை வழங்கினார் முதல்வர் பழனிசாமி.வில்சனின் மனைவி மற்றும் 2 மகள்களிடம் ரூ.1 கோடி நிதியை தலைமைச்செயலகத்தில் வழங்கினார் முதல்வர் பழனிசாமி.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025